குடும்பத்தை வலுப்படுத்த பெரும்பான்மை தேவையாம்?

புதிய அரசாங்கத்தின் வரவு- செலவுத்திட்டத்துக்கு ஆதரவளிக்க எதிர்க்கட்சித் தயாரென அறிவித்த பின்பும், அத்திட்டத்தை சமர்ப்பிக்காமலிருப்பது வேடிக்கையானதெனத் தெரிவித்த அவர், மூன்றிலிரண்டு பெரும்பான்மையை நாடாளுமன்றத் தேர்தலில் கோரிநிற்பதும் வரிக்குறைப்பு, வேலைவாய்ப்பு வழங்கும் திட்டம் ஆகிய தேர்தல் காலத்தை இலக்கு வைத்து நடத்தப்படும் நாடகமாகும் என தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா,  வருமானத்தை அதிகரித்துக் கொள்வதற்கு வழியில்லாமல், அரசாங்கம் தவிக்கிறது என்றார். 
தனது முதலாவது வரவு- செலவுத் திட்டத்தை, நாடாளுமன்றத்தில் எப்போது வேண்டுமானாலும் சமர்ப்பிக்க முடியுமெனத்தெரிவித்த அவர் வருமானத்தை ஈட்டிக்கொள்ள வழியில்லாது, விழி பிதுங்கிக்கொண்டிருக்கும் புதிய அரசாங்கம்,  சலுகைகளை வழங்குவதற்கு, போதியளவு நிதியில்லையென மக்கள் முன்னிலையில் அன்றாடம் அழுதுக்கொண்டிருக்கிறது என்றும் அவர் கூறினார்.
நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிப்பீடமேறிய  முதல் காலாண்டுப் பகுதியில், முன்னைய அரசாங்கம் செலுத்தாமல் இருந்த கடனில் 150 பில்லியன் டொலர்களைச் செலுத்திவிட்டே நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பியதெனத் தெரிவித்த அவர்,  ஒரேயொரு குடும்பத்தை பலப்படுத்தும் நோக்கிலேயே 2/3 பெரும்பான்மை அதிகாரத்தை அரசாங்கம் கோரிநிற்கின்றது என்றார்.

No comments