சிறிசேனவுக்கு சிக்கல்; நீதிமன்றம் அனுமதித்து

பொலிஸ்மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான முடிவுக்கு எதிராக பூஜித் ஜயசுந்தர தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனுவில் பிரதிவாதியாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை பெயரிட உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜெயசூரிய மற்றும் நீதிபதிகள் எஸ்.தூரைராஜா மற்றும் காமினி அமரசேகர ஆகியோர் அடங்கிய மூன்று பேர் கொண்ட நீதிமன்ற அமர்வே இந்த முடிவை இன்று (03) அறிவித்துள்ளது.

No comments