சஜித் இதயத்துக்கு கடும் போட்டி?

சஜித் பிரேமதாச முன்மொழிந்ததாக கூறப்படும் இதயம் சின்னத்தை தேர்தல்கள் ஆணைக்குழுவில் ஏற்கனவே பதிவு செய்து விட்டோம் என்று தேசப்பற்றுள்ள ஐக்கிய தேசியக் கட்சி இன்று (17) தெரிவித்துள்ளது.

இன்று தேர்தல் ஆணைக்குழுவுக்கு சென்ற அதன் செயலாளர் சுகத் ஹேவாபத்திரன, "இதயம் சின்னத்தை நாங்கள் பதிவு செய்துள்ளதால் யாரும் அதற்கு உரிமை கோர முடியாதென" தெரிவித்துள்ளார்.

இதேவேளை சஜித் பிரேமதாச அணியினர் இதயம் சின்னத்தை பயன்படுத்தும் கோரிக்கைக்கு தேர்தல் ஆணைக்குழு இதுவரை ஒப்புதல் வழங்கவில்லை.

இதனால் அடுத்த ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழுக் கூட்டத்தின் போது யானை சின்னத்திலா அல்லது அன்னம் சின்னத்திலா போட்டியிடுவது என்பது குறித்து சஜித் அணி இறுதி முடிவை எடுக்குமென சொல்லப்பட்டுகிறது.

No comments