ரஞ்சனின் குரல்பதிவில் தேசிய பாதுகாப்புக்கு குந்தகம்

நாடாளுமன்றில் ரஞ்சன் ராமநாயக்க எம்பியினால் கையளிக்கப்பட்ட அவரது கைபேசி குரல் பதிவுகளை அனைத்து எம்பிகளுக்கும் வழங்க கட்சித் தலைவர்கள் இன்று (07) தீர்மானித்துள்ளனர்.

இதன்படி குறித்த குரல் பதிவுகளில் இருந்து தவறான மற்றும் தேசிய பாதுகாப்புக்கு குந்தகம் ஏற்படுத்தும் பகுதிகள் நீ்க்கப்பட்ட பின்னர் அனைத்து எம்பிகளிடமும் குறித்த குரல் பதிவை கையளிப்பது என்றும் தீர்மானமிக்கப்பட்டுள்ளது.

No comments