ஜிஹான் கைதுக்கு - நீதிமன்றம் விடுத்த உத்தரவு

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நீதிபதி ஜிஹான் பிலப்பிட்டியவை மஜிஸ்திரேட் நீதிமன்ற அனுமதியின்றி கைது செய்ய தடை விதித்து மேன் முறையீட்டு நீதிமன்றம் இன்று (20) உத்தரவிட்டுள்ளது.

ரஞ்சன் ராமநாயக்கவின் குரல் பதிவு விவகாரத்தில் தன்னை கைது செய்வதை தடை செய்யக் கோரி நீதிபதி ஜிஹான் பிலப்பிட்டிய நேற்று மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு மீதான விசாரணையின் போதே மேன் முறையீட்டு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

No comments