இராணுவ ஆட்சிக்கு அரசு தயார்?

நாட்டில் இராணுவ ஆட்சியை ஏற்படுத்தும் நோக்கிலேயே அரசாங்கம் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகிறது என்று நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.

அரசாங்கம் முன்னெடுக்கும் செயற்றிட்டங்கள் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும்,

போக்குவரத்து சேவையில் பொலிஸாருடன் இராணுவத்தினரை இணைத்துக் கொண்டுள்ளமைக்கான நோக்கமென்ன?. பல நெருக்கடிகளுக்கு மத்தியிலேயே பொலிஸார் வீதிப்போக்குவரத்து சேவையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இராணுத்தினரை சேவையில் இணைத்து அவர்களுக்கு மாத்திரம் விசேட சலுகைகளை வழங்குவதனால் இருதரப்பினருக்கும் இடையில் முரண்பாடுகள் தோன்றுவதற்கு வாய்ப்புக்கள் அதிகம் உள்ளன.

அதாவது, நாட்டில் இராணுவ ஆட்சியினை ஏற்படுத்தும்  நிலைப்பாட்டிலேயே  அரசாங்கம் செயற்படுகின்றது. அதிலொரு அங்கமாகவே  இச் செயற்பாட்டினை பார்க்ககூடியதாக இருக்கின்றது - என்றார்.

No comments