காணாமல் போனோர் யாருக்கு:குடுமிப்பிடி?


இலங்கையின் சுதந்தி தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தி இன்று காலை கிளிநொச்சி மற்றும் மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது.

இலங்கை அரசு மற்றும் சர்வதேசத்தின் கவனத்தையீர்க்கும் வகையில் கவனயீர்ப்பு போராட்டங்கள் நடாத்தப்பட்டிருந்தது.

காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளிற்கு நீதி கோரி ஆயிரம் நாட்களை தாண்டி போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவரும் களங்களிலேயே இன்றும் மக்கள் ஆதரவுடன் குடும்பங்கள் போராட்டங்களை முன்னெடுத்திருந்தன.

இதனிடையே கிளிநொச்சியில் அரசியல் கட்சிகள் சிலவற்றினது தலையீடு காரணமாக இரு வௌ;வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இதனால் போராட்டம் வலுவிழந்துள்ளதுடன், இரு குழுக்களாக பிரிந்து நடைபெற்ற போராட்டத்தில் ஒரு தரப்பின் மீது மற்றைய தரப்பு வசைபாடி கொண்டது.
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான உண்மை நிலையை வெளிப்படுத்தக்கோரி வடகிழக்கு மாகாணங்களில் இருந்து பெருமளவு மக்கள் கலந்து கொள்ளும் போராட்டத்திற்கு திட்டமிடப்பட்டது. 

இந்நிலையில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தனது ஆதரவாளர்களுடன் ஒரு பகுதியாகவும், தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் தனது ஆதரவாளர்கள் சகிதம் இன்னொரு புறமாகவும் போராட்டம் நடாத்தினர்.

இரு தரப்புக்களும் ஒரு தரப்பிற்கு இன்னொரு தரப்பென மாறி மாறி கோசங்களால் வசைபாடினர்.

ஒரு தரப்பு பேரணியாக செல்ல இன்னொரு தரப்பு போராட்ட களத்திலேயே ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்தது. 



No comments