நான்காவது ஆண்டில் பயணிக்கிறது போராட்டம்?


காணாமல் ஆக்கப்பட்டோர் போராட்டத்தை தமது கேவல அரசியலுக்கு அனைத்து தரப்புக்களும் பயன்படுத்த இலங்கையை தாமதமின்றி சர்வதேச குற்றவியல் நீதிமன்றிற்கு நிறுத்த வலியுறுத்தி மூன்று வருடங்களை கடந்து நான்காவது வருடத்தை அண்மித்துள்ள போராட்டகளம்.

வலிந்து காணாமல்ஆக்கப்பட்டவர்களினால் கிளிநொச்சியில் முன்னெடுக்கப்படும் போராட்டம் இன்றுடன் மூன்று வருடங்களை தாண்டி பயணிக்கின்றது.

இதனை நினைவு கூர வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் அலுவலகத்திற்கு முன்னால் இன்று காலை போராட்டம் முன்னேடுக்கப்பட்டது. இதில் வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் ,சமுக அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டார்கள். 

இதனிடையே இன்று 1096ஆவது நாளாக கிளிநொச்சி மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் தொடர் கவனயீர்ப்புபோராட்டம் மூன்று வருடங்களை கடந்து நான்காவது வருடத்தில் கால் பதித்துள்ளது.;

No comments