வசந்தா கரன்னகொடவை காணோம்?


2008 மற்றும் 2009 க்கு இடையில் 11 தமிழ் இளைஞர்களைக் கடத்திச் சென்று கட்டாயமாக காணாமல் ஆக்கியது தொடர்பான உயர்நீதிமன்ற விசாரணையில் முன்னாள் கடற்படைத் தளபதி, அட்மிரல் வசந்தா கரன்னகொட (Wasantha Karannagoda) அவர்களுக்கு உயர்நீதிமன்றம் கடந்த 7 ஆம் திகதி மூன்றாவது தடவையாக பொலிஸ் மா அதிபர் மற்றும் இலங்கை கடற்படைத் தளபதி மூலம் சம்மன் (summons) அனுப்பி இருக்கிறது.
இந்த வழக்கில் சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான சட்டவாதி ஜெனரல் சரத் ஜெயமன்னே (General Sarath Jayamanne), Beddagana and Kirulapone ஆகிய இடங்களில் அமைந்துள்ள முன்னாள் கடற்படைத் தளபதி, அட்மிரல் வசந்தா கரன்னகொட (Wasantha Karannagoda) அவர்களின் வதிவிடங்கள் மூடப்பட்டிருப்பதால் நீதிமன்றம் அனுப்பிய முதல் இரண்டு சம்மன்க்ளும்(summons) அவரிடம் சேர்ப்பிக்க முடியவில்லை என்றும் அவரின் வதிவிடம் குறித்த தகவல் இல்லை என்றும் நீதிமன்றத்தில் தெரிவித்து இருக்கிறார்.
ஆனால் 04/02/2020 அன்று சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் இலங்கையின் சட்டமா அதிபர் Dappula de Livera அவர்களின் அருகில் முன்னாள் கடற்படைத் தளபதி, அட்மிரல் வசந்தா கரன்னகொட (Wasantha Karannagoda) அமர்ந்து இருந்தார்
மூன்று நாள் கழித்து 07/02/2020 அன்று நீதிமன்றத்தில் சட்டமா அதிபர் Dappula de Livera அருகில் அமர்ந்து இருந்த முன்னாள் கடற்படைத் தளபதி, அட்மிரல் வசந்தா கரன்னகொட (Wasantha Karannagoda) குறித்து எந்த தகவல் இல்லை சொல்லுகிறது சட்டமா அதிபர் திணைக்களம்.

No comments