மாயமானது மாதா சிலை!

வவுனியா - பூந்தோட்டம் பகுதியில் வீதியில் வைக்கப்பட்டிருந்த மாதா சொரூபம் மாயமாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சாந்தசோலை உபவீதி பூந்தோட்டம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான வீட்டின் வாயிலில் வைக்கப்பட்டிருந்த மாதா சொரூபமே விசமிகளால் இன்று (10) உடைக்கப்பட்டு களவாடப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் அனைத்து சமூகத்தினரும் ஒற்றுமையுடன் வாழ்ந்து வரும் நிலையில், இச்செயற்பாடானது குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கிராம மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு முறைப்பாடளித்து நடவடிக்கை எடுக்கவுள்ளதாக வீட்டின் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

No comments