வெலிஓயா கணக்கில் இல்லையாம்?


வடக்கில் வன்னி மாவட்டங்களில் நிலவும் வனவள திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களங்களின் பிரச்சினைகள் தொடர்பான கூட்டத்திற்கு திட்டமிட்டு தமிழ்தேசிய கூட்டமைப்பு புறக்கணிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு, மன்னார் மற்றும், வவுனியா ஆகிய மாவட்டங்களில் நிலவும்; பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்கான கூட்டம் இடம்பெற்றிருந்தது.

இ;ந்த கூட்டத்திற்கு தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அழைக்கப்படவில்லை. கலந்துரையாடலில் திணைக்களங்களின் அமைச்சர், பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட அதிகாரிகளும் மாவட்டச் செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள் ஆகியோருடன் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுத் தலைவர்களும் கலந்துகொண்டிருந்தனர். இதன்போது முல்லைத்தீவு மாவட்டத்தில் திணைக்களங்களின் பிடியில் உள்ள நிலங்களின் விபரம் சமர்ப்பிக்கப்பட்டு ஆராயப்பட்டது.

இவ்வாறு ஆராயப்பட்ட கலந்துரையாடலில் முல்லைத்தீவு மாவட்டம் சார்பில் ஆராயப்பட்டவேளையில் முல்லைத்தீவில் 5 பிரதேச செயலாளர் பிரிவுகளை காண்பித்தே விபரத்தை சமர்ப்பித்துள்ளனர். அதாவது 6 வது பிரதேச செயலகம் எனக் கூறப்படும் வெலிஓயா எனப்படும் மணலாறு தொடர்பில் எந்த தகவலையும் வெளிப்படுத்தவே இல்லை .

மணலாறு பிரதேச செயலாளர் பிரிவானது 116 சதுரக் கிலோ மீற்றர் பரப்பளவைக் கொண்டது. 116 ச.கிலோமீற்றர் என்றால் 70 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பாகும். அந்த 70 ஆயிரம் ஏக்கர் நிலமும் தமிழர்களின் பூர்வீக நிலமாகும்.

அதனை படிப்படியாக அபகரித்து குடியேற்றம் என்னும் பெயரில் அபகரித்து வைத்துள்ளமை விவாதத்திற்கு வருவதை தவிர்த்து கூட்டத்தில் ஆராயப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

No comments