விக்கி கூட்டணி நாளை உருவாகிறது

வடக்கின் முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தலைமையில் உருவாக்கப்படுகின்ற புதிய கூட்டணிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் நாளை (09) ஞாயிற்றுக்கிழமை கைச்சித்திடப்பட்டு கூட்டணி தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்புக்கள் வெளியிடப்பட இருக்கின்றதாகத் தெரியவருகின்றது.

இந்த புரிந்தணர்வு ஒப்பந்தம் அன்றைய தினம் காலை 9.30 மணி முதல் 11.30 மணிக்கிடைப்பட்ட சுப நேரத்தில் கையொப்பமிடப்பட உள்ளதுடன் கூட்டணியின் பெயர் மற்றும் சின்னம் மற்றும் கட்சிகள் அமைப்புக்கள் குறித்தான முழுமையான விபரங்களையும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் வகையில் ஊடக சந்திப்பொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments