முல்லையில் வெடித்த குண்டால் தாய், மகன் கைது

முல்லைத்தீவு - சிலாவத்தை பகுதியில் குண்டு ஒன்றை பிரித்து வெடிமருந்தை எடுக்க முயன்றவர் குறித்த குண்டு வெடித்ததில் படுகாயமடைந்ததை அடுத்து வெடிப்பு இடம்பெற்ற வீட்டிலிருந்து மேலும் சில வெடிபொருட்கள் மீட்கப்பட்டது.

இதனையடுத்து இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் பூட்டியிருந்த குறித்த வீட்டை பொலிஸார் சோதனை செய்த நிலையில் சுமார் மூன்று கிலோவுக்கும் அதிகமான வெடிமருந்து பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

சம்பவத்தில் படுகாயமடைந்த நபர் வெடி மருந்துகளை எடுத்து விற்பனை செய்பவர் எனக் கூறப்படும் நிலையில் வெடி மருந்து வியாபாரத்தில் சந்தேகம் கொண்ட பொலிஸார் காயமடைந்தவரின் தாயாரான குறித்த வீட்டின் உரிமையாளர் மற்றும் காயமடைந்தவரின் சகோதரனாகிய இருவரையும் கைது செய்துள்ளனர்.

மேலும் தடயவியல் பொலிஸார் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்ட நிலையில் விசேட அதிரடிப்படையினரால் அவர்களுடைய வீடுகள் சோதனை செய்வதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

No comments