பதட்டத்தில் தமிழரசு:அவசர கூட்டத்தில் சம்பந்தன்?


அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் கூட்டமைப்பு பெரும் பின்னடைவை சந்திக்குமென எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மத்திய செயல்குழுக் கூட்டம் எதிர் வரும் 23ம் திகதி கிளிநொச்சியில் இடம்பெறவுள்ளது.

கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கலந்து கொள்ளும் குறித்த கூட்டத்தில் எதிர்கால நடவடிக்கைகள் , தற்போதைய அரசியல் நிலவரம் , நாடாளுமன்றத் தேர்நல் தேர்தல் நியமனக் குழு விடயங்கள் என்பன ஆராயப்படவுள்ளதாக சுட்டிக் காட்டப்படுகின்றது.

23 ம் திகதி பிற்பகல் 2 மணிக்கு இடம்பெறும் குறித்த கூட்டத்திற்கான அறிவித்தல் மத்திய செயல்குழு உறுப்பினர்களிற்கு தபாலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தேர்தல் நெருங்கும் நிலையில் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தலைமையில் தோற்றுவிக்கப்பட்டுள்ள நிலையில் கூட்டமைப்பிடையே பதற்றம் தோன்றியுள்ளமை தெரிந்ததே.

No comments