ஆலய வீதியில் பெண்ணின் சடலம்?


வவுனியா, குடியிருப்பு பகுதியில் வவுனியா குளத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள பிள்ளையார் ஆலய வளாகத்தில் இன்று (14) காலை பெண்ணின் சடலம் ஒன்றினை பொலிஸார் மீட்டுள்ளனர்.
ஆலய வளாகத்திற்கு அருகே பெண்ணின் சடலம் காணப்படுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு இணங்க சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா பொலிஸார், பெண்ணின் சடலத்தினை மீட்டெடுத்துள்ளனர்.
அத்துடன் தடவியல் பொலிஸார் மற்றும் நீதவான் பார்வைக்காக சடலம் காணப்படும் இடத்தினை சுற்றி பொலிஸ் பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக குடியிருப்பு – பூந்தோட்டம் வீதிக்கான குளக்கட்டு வீதி போக்குவரத்துத்துக்கு பொலிஸார் தற்காலிக தடை விதித்துள்ளனர்.
மேலும் உயிரிழந்த பெண் வவுனியா நகரில் யாசகம் பெற்று வந்த பெண் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருவதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

No comments