கஞ்சா மேலே கஞ்சா - மூவர் சிக்கினர்?

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பொலிஸாரினால் 6 கிலோ கஞ்சாவுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்கள் பயன்படுத்திய இரண்டு மோட்டார் சைக்கிள்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதன்போது, சுதந்திரபுரம் பகுதியில் சந்தேகத்தின்பேரில் மூவரிடம் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் அவர்களை அழைத்துச் சென்ற நிலையில் சுண்டிக்குளம் கடற்கரைப் பகுதியில் மண்ணினுள் புதைத்து வைத்திருந்த நிலையில் சுமார் 6 கிலோ கஞ்சா மீட்கக்கப்பட்டது.

அத்துடன் குறித்த மூவரையும் கைதுசெய்த பொலிஸார் அவர்களின் மோட்டார் சைக்கிள்கள் இரண்டினையும் கைப்பற்றினர்.

No comments