கஞ்சா வியாபாரி சிக்கினார்

மட்டக்களப்பு - வாழைச்சேனைப் பிரதேசத்தில் ஐஸ் போதைப் பொருள் மற்றும் கஞ்சா விற்பனை செய்யும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதானவரிடம் இருந்து 50 கிராம் கேரளா கஞ்சா மற்றும் 20 கிராமும் 75 மில்லிக்கிராமும் உடைய ஐஸ் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

மாவட்ட புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் மாவட்ட புலனாய்வு பிரிவினர் கஞ்சா வியாபாரியின் வீட்டை சுற்றி வழைத்து தேடுதல் நடத்தினர்.

இதன்போது, மறைத்து வைக்கப்பட்டிருந்த குறித்த போதைப் பொருட்களைப் கைப்பற்றிதோடு வியாபாரியையும் கைது செய்துள்ளனர்.

No comments