ஐரோப்பாவை ஆட்டிப்போட்ட சியரா புயல்! வானூர்தி , தொடரூந்து சேவைகள் ரத்து;

வடமேற்கு ஐரோப்பா முழுவதும் சியாரா புயல் தாக்கியதால்   நூற்றுக்கணக்கான வானூர்திகளும் , தொடரூந்து சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

 வடக்கு பிரான்ஸ் எச்சரிக்கையில் வைக்கப்பட்டதோடு  130,000 வீடுகளில் கடலோர புயல் எழும் என்ற அச்சத்தின் மத்தியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

சியார புயல் மெட்டியோ-பிரான்ஸ் கடற்கரையில் ஒரு மணி நேரத்திற்கு 130 தொடக்கி 200 கி.மீ. வேகத்தில் வீசியுள்ளதாக கூறப்படுகிரர்த்து,
 மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் முறிந்து விழுந்ததோடு,வீடுகளின் கூரைகளும் தூக்கி எறியப்பட்டுள்ளதாக  மீட்பு சேவைகள் அதிகாரிகள் தெரிவித்துள்ளர்.


பெரும்பாலும் வடக்கு இங்கிலாந்து மற்றும் தெற்கு கடற்கரை முழுவதும். மேற்கு யார்க்ஷயர் நகரங்கள் புயலால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன, வீதிகள்  நீரில் மூழ்கியதால் மக்கள் பெரிதும் அவதிக்குள்ளகியுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை மாலை நிலவரப்படி, பிரிட்டன் முழுவதும் 62,000 வீடுகள்  மின்சாரம் துண்டிக்கப்பட்டிருப்பதக்க அந்நாட்டு ஊடககங்கள் தெரிவிக்கின்றன.

No comments