கட்டுக்கட்டா கொவிட்-19 பண நோட்டுக்கள் எரிப்பு

சீனாவில் காெராேனா எனும் கொவிட்-19 வைரஸ் உயிரிழப்பு அதிகரித்து வரும் நிலையில் வைரஸ் தொற்றுள்ள பண நோட்டுகளை எரிக்க அந்நாட்டு மத்திய வங்கி முடிவு செய்துள்ளது.

அதற்கமைய வைரஸ் தொற்று பாதிப்புள்ள பகுதியில் உள்ள வங்கிக்கு வரும் நோட்டுகளை, 14 நாட்களில், அதிக வெப்பத்தில் வைத்து எரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அதிக முறை கைகளினால் நாணய நோட்டுக்கள் பரிமாற்றப்படுவதால் அவற்றிலும் கொவிட்-19 வைரஸ் தொற்றிக் கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் சீனாவில் கொவிட் – 19 வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2125 ஆக உயர்வடைந்துள்ளது.

No comments