கொரோனா வைரசுக்கு அமெரிக்காதான் காரணமா!

சீனாவில் பரவத்துவங்கிய கொரோனா வைரசினால்  உலகின் 24 நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.   சுமார் 2500 பேருக்கு மேல் மரணம் அடைந்துள்ளதாகவும் பல்லாயிரக்கணக்கானோர் பாதிப்பு அடைந்துள்ளதாகவும் உலக தகவல்கள் தெரிவிக்கின்றது .   அத்துடன் இந்த வைரஸ் காரணமாக உலக சுகாதார அமைப்பு அவசர நிலை பிரகடனம் செய்துள்ளது.

இந்த வைரஸ் தொற்றுக்கு அமெரிக்கா காரணம் என ஒரு சிலரும் சீனாவில் ரகசியமாக நடந்த ஆய்வின் கசிவால் வைரஸ் வெளி வந்து பாதிப்பை ஏற்படுத்தி வருவதாக வேறு சிலரும் குறை கூறி வருகின்றனர்.   இந்நிலையில் அமெரிக்க அரசின் ஐரோப்பியப் பகுதி அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் இது குறித்துப் பேசி உள்ளார்.
அந்த அதிகாரி, “சமுக வலைத்தளங்கள் மூலம் ரஷ்ய ஊடகங்கள் அமெரிக்காவைக் குற்றம் சாட்டி வருகிறது.  இந்த ஊடகங்கள், டிவிட்டர், முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட வலை தளங்களில் கொரோனா வைரஸ் தொற்றின் பின்னணியில் அமெரிக்காவின் சி ஐ ஏ உள்ளதாக தவறான செய்திகளைப் பரப்பி வருகின்றன.
இந்த தவறான செய்திகளின் மூலம் ரஷ்யா அமெரிக்க அரசின் அமைப்புக்களை தவறாகச் சித்தரித்து அமெரிக்காவின் நற்பெயரைக் குலைக்க முயற்சி செய்கிறது.  அது மட்டுமின்றி  ரஷ்ய ஊடகங்கள் கொரோனா வைரஸ் குறித்த உலக மக்களின் அச்சத்தை மேலும் அதிகரித்து வருகிறது.” எனக் குற்றம் சாட்டி உள்ளார்.

No comments