மாற்றாந்தாய் மனப்பான்மையில் யாழ்.விமானநிலையம்?


யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஊடாக பயணிக்கும் பயணிகளிடத்தே பாகுபாடுகள் தொடர்ந்தும் கடைப்பிடிக்கப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் தொடர்கின்றன.விமான கட்டணமாக அதிக கட்டணம் அறிவிடப்படுவதை நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு வடமாகாணசபை முன்னாள் உறுப்பினர் இ.ஜெயசேகரம்,

இலங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஸவுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருக்கின்றாh
யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் தனது முதலாவது விமான சேவையினை ஆரம்பித்ததிலிருந்து விமான பயணசீட்டுக்கள் அதிகமான விலைக்கு விற்கப்படுகிறது.இது கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக மேற்கொள்ளப்படும் சில இந்திய விமான நிறுவனங்களின் கட்டணத்தை விட அதிகமாக காணப்படுகிறது.இது வடமாகாண சர்வதேச விமான நிலையத்தினூடாக பயணிக்கும் பயணிகளுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
யாழ்ப்பாண விமான நிலையத்தின் ஊடாக பயணிக்கும் பயணிகளுக்கு கட்டுநாயக்க விமான நிலையம் போன்ற வசதிகள் இங்கே இல்லை. 
அத்துடன் பயணி ஒருவர் தனது விமானப் பயணத்தின் போது பயணப் பொதியாக சுமார் 15 கிலோவும், கையில் எடுத்துச் செல்லக்கூடியதாக 5 கிலோவுமாக 20 கிலோ மட்டுமே கொண்டுவர அல்லது எடுத்துச்செல்ல முடியும்.இதேவேளை கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக பயணிக்கும் பயணி ஒருவர் தனது விமானப் பயணத்தின் போது பயணப்பொதியாக சுமார் 30 கிலோவும்,கையில் எடுத்துச் செல்லக்கூடியதாக 7 கிலோவுமாக 37 தொடக்கம் 40 கிலோ வரையான பயணப்பொதிகளை கொண்டுவர அல்லது எடுத்துச்செல்ல அனுமதிக்கப்படுகின்றார்கள்.
பிராந்திய வசதி குறைந்த விமான நிலையம் ஆகையால் விமான பயணச்சீட்டுடன் சேர்த்து அறவிடப்படும் விமான நிலைய வரியினை 50வீதம் குறைப்புமேற்கொள்ளுமிடத்தில் பயணிகள் குறைந்த தொகைக்கு விமானப் பயணச் சீட்டினை பெறக்கூடியதாக இருக்கும்.
இலங்கையில் 14 நாட்டு நாயணங்களை இலங்கையில் உள்ள வங்கிகளில் மாற்றுவதற்கு அல்லது வங்கிகளில் பெறமுடியுமென மத்திய வங்கியின் சுற்றுநிரூபம் கூறுகிறது.
ஆனால் நாள் தோறும் இலங்கையிலிருந்து பெருந்தொகையான பயணிகள் இந்தியாவிற்கும், இந்தியாவிலிருந்து இலங்கைக்கும் விமானம் மூலம் பயணிக்கின்றார்கள்.
ஆனால் இந்திய ரூபாவை எடுத்துச்செல்லவோ அல்லது அங்கிருந்து எடுத்துவரவோ சட்டரீதியான அனுமதி இல்லை. இதன் மூலம் பயணிகள் பல சிரமங்களை எதிர்நோக்குகின்றார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே தற்போது வரை விமான நிலையத்திற்கான பொது போக்குவரத்து பாதை இன்றிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments