வடக்கு கிழக்கு தொடர்ந்தும் பின்வரிசையில் முன்னணி?


மாகாண ரீதியான மொத்த உள்நாட்டு உற்பத்தி , தேசிய ரீதியான மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு மாகாண அலகுகள் வழங்கிய பங்களிப்புகள் உட்பட பொருளாதார சுட்டிகள் இலங்கை புள்ளிவிபர திணைக்களத்தால் வெளியிடப்பட்டு இருக்கின்றன.

வடக்கு கிழக்கு மாகாணங்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியிலும் தேசிய ரீதியான பங்களிப்புகளிலும் கடுமையாக பின் தங்கி இருக்கின்றன. 2017 ஆம் ஆண்டு வடக்கு மாகாணத்தின் மொத்த உள்நட்டு உற்பத்தி 550 பில்லியனாக இருந்தது. இது 2018 இல் வெறும் 588 பில்லியன் இருக்கிறது .கிழக்கு மாகாணம் 2017 ஆம் ஆண்டு 719 பில்லியன் ரூபா மொத்த உள்நாட்டு உற்பத்தியையும் 2018 ஆம் ஆண்டு 815 பில்லியன் மொத்த உள்நாட்டு உற்பத்தியையும் மேற்கொண்டு இருக்கிறது . பின்தங்கிய மாகாணங்களாக கருதப்படும் வட மத்திய மாகாணம் , ஊவா மாகாணம், உட்பட்ட சகல மாகாணங்களும் வடக்கு கிழக்கு மாகாணங்களை விட கணிசமான முறையில் முன்னணியில் இருக்கின்றன.
தேசிய உள்நாட்டு உற்பத்திக்கு மாகாணங்கள் வழங்கிய பங்களிப்புகளை பார்க்கிற பொது 2017 மற்றும் 2018 ஆண்டுகளில் வடக்கு மாகாணம் 4.1 % மட்டுமே பங்களிப்பு செய்து இருக்கிறது. கிழக்கு மாகாணம் 2017 மற்றும் 2018 ஆண்டுகளில் 5.6 % வீத பங்களிப்பை செய்து இருக்கிறது.

வடக்கு கிழக்கு மாகாணங்களில் விவசாயத்துறைக்கு நிகரான வருவாயை உருவாக்க கூடிய துறையாக கடற்தொழில் இருக்கிறது . 2018 ஆம் ஆண்டு காலப்பகுதியில் வடக்கு மாகாணம் 78,620 மெற்றிக்தொன் கடல் சார் உற்பத்திகளை மட்டுமே செய்து இருக்கிறது. கிழக்கு மாகாணம் 70,600மெற்றிக்தொன் கடல் உற்பத்திகளை செய்து இருக்கிறது. 2017 ஆம் ஆண்டு வடக்கு மாகாணம் 83,155மெற்றிக்தொன் உற்பத்திகளை செய்து இருக்கிறது .கிழக்கு மாகாணம் 77,790 மெற்றிக்தொன் கடல் உற்பத்திகளை செய்து இருக்கிறது. கடந்த காலங்களோடு ஒப்பிடும் பொது இது கடுமையான வீழ்ச்சியாக இருக்கிறது. குறிப்பாக கடந்த காலங்களில் யாழ்ப்பாணத்தில் மட்டும் ஆண்டு ஒன்றுக்கு 50000 மெற்றிக்தொன் கடல் சார் உற்பத்திகளை செய்து இருக்கிறது.

நல்லாட்சி அரசாங்கம் ஆட்சியில் இருந்த இந்த காலப்பகுதியில் தமிழ் மக்கள் பிரதிநிதிகள் ஆளும் கட்சியின் பங்காளர்களாக இருந்த காலப்பகுதியில் கூட பொருளாதார ரீதியாக வடக்கு கிழக்கு மாகாணங்கள் எந்த விதமான முன்னேற்றங்களையும் காட்டவில்லை என்பது மிகுந்த ஏமாற்றகரமானது. 

No comments