கொரோனா வைரஸ்! இறந்தவர்களின் 717 பேராக உயர்வு!

சீனாவின் கொரோனா வைரஸ் தொற்று நோயினால் இறந்தவர்களின் 717 பேராக உயர்ந்துள்ளது.

இது இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் சீனாவின் பிரதான நிலப்பகுதி மற்றும் ஹாங்காங்கில் சார்ஸ் வைரஸில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை விட அதிகமாக உள்ளது.

ஹூபே மாகாணத்தில் வைரஸால் 81 பேர் இறந்தனர். அங்கு வைரஸ் நோய் உருவாகியது டிசம்பர் மாதம் என் பிராந்திய சுகாதார ஆணையகம் கூறுகிறது.

ஹூபேயில் மேலும் 2,841 பேருக்கே கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்நோயினால் மாகாணத்தில் 24,953 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் 34,000 க்கும் மேற்பட்டோர் தொற்றுநோய்க்கு உள்ளாகியுள்ளனர்.

சீனாவின் வெளியே கொங்ஹாங்கில்  ஒருவரும் பிலிப்பைன்ஸில்  மற்றொருவருமாக இருவர் உயிரிழந்துள்ளனர்.

25 நாடுகளுக்கு இந்நோய் பரவியுள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை, 34 வயதான வுஹான் என்ற மருத்துவர் மரணமடைந்தார்.

இவர் தான் டிசம்பர் மாதம் சீனாவில் கொரோனா வைரஸ் தொற்று நோய் குறித்து ம்பரில் வைரஸ் குறித்து எச்சரிக்கை விட்டிருந்தார் என்பது நினைவூட்டத்தக்கது.

No comments