ஷஹ்ரானின் சகாக்கள் டுபாயில் இருந்து கொண்டு வரப்பட்டனர்

கடந்தவருடம் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் சூத்திரதாரி பயங்கரவாதி ஷஹ்ரான் ஹஷிமுடன் நெருக்கமாக செயற்பட்ட இருவர் டுபாயிலிருந்து நேற்று (15) இலங்கை கொண்டுவரப்பட்டனர்.

நாவலப்பிட்டி - ஹப்புக்கஸ்தலவை சேர்ந்த மொஹம்மட் சலீம் அப்துல் சலாம், அம்பாந்தோட்டை - சிறிபோபுரவை சேர்ந்த மொஹம்மட் ஷஹ்ரான் மொஹமட் ரியாஸ் ஆகியோரே கைதுசெய்யப்பட்ட நிலையில் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டனர்.

ஏற்கனவே சவூதி மற்றும் கட்டாரில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் இருந்து கிடைத்த தகவல்களை அடிப்படையாக வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

No comments