மகனை மீட்க போராடிய விமல்?

சீனாவில் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில், அங்கு கல்வி கற்ற இலங்கை மாணவர்கள் அவசரமாக நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர்.
இதன் பின்னணியில் அமைச்சர் விமல் வீரவன்ச செயற்பட்டதாக  சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
சீனாவில் கல்வி கற்கும் வீரவன்சவின் மகனை நாட்டுக்கு அழைத்து வரும் நோக்கில் விரைவாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக குறித்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.
வீரவன்சவின் மகனான விபூதி விஷ்வஜித் சீனாவின் சிவு ஆன் பிராந்தியத்தில் வைத்தியதுறையில் கல்வி கற்று வருகிறார்.
இந்நிலையில் கொரோனா வைரஸ் காரணாக சீனாவில் உள்ள இலங்கை மாணவர்களை வெகு விரைவில் நாட்டிற்கு அழைத்து வருவதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டது.
சிவு ஆன் பிராந்தியத்தில் உள்ள மகனை அழைத்து வருவதற்காகவே, கொரோனா வைரஸினால் கடுமையான பாதிக்கப்பட்ட வுஹானில் உள்ள இலங்கை மாணவர்களை இலங்கைக்கு அழைத்து வருவதற்கு அரசாங்கம் அக்கறை செலுத்தியதாக குறித்த சிங்கள ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது

No comments