யாழில் வாள் வெட்டு; இருவர் படுகாயம்

யாழ்ப்பாணம் – கொட்டடி, வைரவர் கோவிலடியில் நேற்று (15) இரவு வாள்களுடன் சென்ற கும்பல் ஒன்று இருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தியுள்ளது.
சம்பவத்தில் படுகாயமடைந்த இருவரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தத் தாக்குதலையடுத்து குறித்த வாள் வெட்டுக் குழுவை பொதுமக்கள் துரத்திச் சென்ற போது 3 மோட்டார் சைக்கிள்களைக் கைவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இதனையடுத்து கைவிட்டுச் சென்ற 3 மோட்டார் சைக்கிள்களும் பொது மக்களால் சேதமாக்கப்பட்டுள்ளது.

No comments