அமொிக்க இராணுவ மற்றும் பயணிகள் விமானங்கள் வீழ்ந்து நொருங்கினதா?

ஆப்கானிஸ்தானில் கிழக்குப் பகுதியில் அமெரிக்க இராணுவ விமானம் மர்மான முறையில் விபத்துக்கு உள்ளாகியுள்ளது. இன்று திங்கள்கிழமை
உள்ளூர் நேரப்படி 1 மணியளவில் இந்த விபத்து நடத்துள்ளது என அமொிக்க இராணுவம் கூறுகின்றது. இவ்விமானம் தலிபான்களால் சுட்டு வீழ்த்தப்பட்டதா என்பதற்கான எந்தவொரு அறிகுறிகளும் தென்படவில்லை எனத் தெரிவித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் யு.எஸ். படைகளின் செய்தித் தொடர்பாளர் கேரணல் சோனி லெகெட் இது குறித்து தெரிவிக்கையில்:-

காஸ்னி மாகாணத்தில் பாம்பார்டியர் இ -11 ஏ என்ற இராணுவ விமானம் விபத்துக்குள்ளானது என்றும் விபத்துக்குள்ளான காரணங்கள் குறித்து விசாரணைகள் நடந்து வருவதாகவும் கூறியுள்ளார்.

விமான விபத்து அமெரிக்க - தலிபான் அமைப்பினரிடையே நடைபெறும் சமாதானப் பேச்சுவார்த்தைகளை பாதிப்புக்கு ஏற்படாது எனக் கூறப்படுகிறது.

பாம்பார்டியர் இ -11 அமொிக்க விமானப்படையின் மின்னணு கண்காணிப்பு விமானம் விபத்துக்குள்ளான புகைப்படம் எரிந்து காணப்படுவது சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.

எரியும் விமானத்தை தான் பார்த்ததாக அப்பகுதியின் பத்திரிகையாளர் தாரிக் கஸ்னிவால் தெரிவித்தார். இவர் அசோசியேட்டட் பிரஸ்ஸிடம் தெரிவிக்கையில், இரண்டு உடல்களைக் கண்டதாகவும், விமானத்தின் முன்புறம் மோசமாக எரிந்ததாகவும் கூறினார். விமானமும் அதன் வால் ஒன்றும் சேதமடையவில்லை என்று அவர் கூறினார். அவரது தகவல்களை சுயாதீனமாக உறுதி செய்ய முடியவில்லை என அசோசியட் பிரஸ் தெரிவித்துள்ளது.

விபத்து நடந்த இடம் அமொிக்க இராணுவ தளத்திலிருந்து 10 கிலோமீட்டர் (6.2 மைல்) தொலைவில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இது முற்றிலும் தலிபான்களின் கட்டுப்பாட்டில் உள்ளது எனக் கூறப்படுகிறது.

விபத்து நடந்த இடத்தைப் பாதுகாக்க உள்ளூர் தலிபான்கள் நிறுத்தப்பட்டுள்ளனர், மேலும் பல தீவிரவாதிகள் அருகிலுள்ள கிராமங்களிலும் நிறுத்தப்பட்டுள்ளனர்.

இந்த இடம் டெஹ் யாக் மாவட்டத்தில் சாடோ கெலோ என்ற கிராமத்திற்கு அருகில் இருப்பதாக கஸ்னிவால் கூறினார். மதியம் 1 மணிக்குப் பிறகு இந்த விபத்து ஏற்பட்டதாகவும் அவர் கூறினார்.

 உள்ளூர் நேரம், ஆனால் அப்பகுதியில் வசிப்பவர்கள் சத்தமாக நொறுங்கும் சத்தத்தைக் கேட்கவில்லை என்று கூறியுள்ளார். விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதா என்று தெரியவில்லை என்றும் அது விபத்துக்குள்ளா சந்தங்கள் தென்படவிலலை எனக் குறிப்பிட்டுள்ளார் குறித்த ஊடகவியலாளர்.

விபத்துக்குள்ளான விமானம்பாம்பார்டியர் E-11A கண்காணிப்பு விமானங்களைப் போலவும் அமொிக்க விமானப்படை பதிவு எண்கள் அடையாளங்களும் தென்படுவதாக விமான ஆய்வாளர்கள் மற்றும் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

போர்க்களத்தில் ஏர்போர்ன் கம்யூனிகேஷன்ஸ் நோட் என்று அழைக்கப்படுபவை  E-11A போன்ற ஆளில்லா அல்லது பணியாற்றும் விமானங்களில் கொண்டு செல்ல முடியும். ரேடியோ சிக்னல்களின் வரம்பை நீட்டிக்க இது இராணுவத்தால் பயன்படுத்தப்படுகிறது மற்றும் ஒரு வானொலியை தொலைபேசியுடன் இணைப்பது போன்ற ஒரு சாதனத்தின் வெளியீட்டை மற்றொரு சாதனமாக மாற்ற பயன்படுத்தலாம் என்று கூறியுள்ளனர்.

அமொிக்க இராணுவத்தால் "வானத்தில் வைஃபை" என்று பேச்சுவழக்கில் குறிப்பிடப்படுகிறது, பிஏசிஎன் அமைப்பு தகவல்தொடர்புகள் கடினமாக இருக்கும் பகுதிகளில் பயன்படுத்தப்படுகிறது. மலைகள் போன்ற தடைகளுக்கு மேலே சமிக்ஞைகளை உயர்த்தும். இந்த அமைப்பு ஆப்கானிஸ்தானில் வழக்கமான பயன்பாட்டில் உள்ளது அவர்கள் மேலும் தகவல் வெளியிட்டுள்ளனர்.

இதேநேரம் இன்று காலை ஆப்கானிஸ்தானில் 83 பயணிகளுடன் புறப்பட்ட போயிங் 737-400 என்ற விமானம் ஹெரெட் பகுதியிலிருந்து புறப்பட்டு காபூர் நோக்கிப் பயணித்த போது வீழந்து நொருங்கியுள்ளது.

அப்போது காஸ்னி அருகே விமானம் விபத்திற்கு உள்ளாகி, கீழே விழுந்து நொறுங்கி உள்ளது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக போயிங் 737-400 விமானம் விபத்திற்கு உள்ளானது. விமானத்தில் பயணித்தவர்கள் நிலை என்ன என்று குறித்து விவரம் இன்னும் வெளியாகவில்லை.

இந்த விபத்து நடந்த பகுதி தாலிபான் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதியாகும். அங்கு இதனால் மீட்பு பணியை செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. தாலிபான்களுடனான பேச்சுவார்த்தைக்கு பின்னரே முழுமையான மீட்பு பணியை மேற்கொள்ள முடியும் என்பது கூறப்பட்டுள்ளது.

No comments