ஜநாவில் காப்பாற்றிய சமனிற்கு எம்பி கதிரை!


ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய பட்டியலில் தெரிவான நாடாளுமன்ற உறுப்பினர் ஜயம்பதி விக்ரமரத்ன பதவி விலகியதை அடுத்து அப்பதவிக்கு சமன் ரத்னபிரியவை நியமிப்பதற்கான வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

இதனிடையே தாதியர் சங்க தலைவராக இருந்து வந்திருந்த சமன் ரத்னபிரிய பல தடவைகளாக ஜநா அமர்வுகளிற்கு சென்று இலங்கை அரசை அதிலும் கோத்தபாய தரப்பை போர்க்குற்ற தண்டிப்பிலிருந்து காப்பாற்றுவதில் முன்னின்று செயற்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன் ரணில் மற்றும் ராஜிதவுடன் நெருங்கிய நட்பை கொண்டிருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments