ஆஷ்விட்ஸ்-பிர்கெனோ மரண முகாம் விடுவிக்கப்பட்ட நாளின் நினைவேந்தல்

1.1 மில்லியன் யூதர்களை ஹிட்லரின் நாசிப் படைகளால் படுகொலை செய்யப்பட்ட ஆஷ்விட்ஸ்-பிர்கெனோ மரண முகாம் விடுவிக்கப்பட்டதன் 75
ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று திங்கட்கிழமை போலந்தில் நடைபெற்றது.

ஆஷ்விட்ஸ்-பிர்கெனோ மரண முகாமில் இருந்து தப்பியவர்கள் ஒன்றுகூடி படுகொலை செய்யப்பட்ட யூதர்கள் மற்றும் உறவினர்களுக்காக பிரார்த்தனை செய்து அழுதனர்,

அவர்கள் தங்கள் குடும்பங்களை இழந்த இடங்களுக்குச் சென்று பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

போலந்து ஜனாதிபதி, இஸ்ரேல் ஜனாதிபதி மற்றும் இம்முகாமில் இருந்து தப்பிய 200 பேர் கலந்துகொண்டனர். அவர்களில் பலர் வயதான யூதர்கள் மற்றும் யூதரல்லாதவர்கள் இஸ்ரேல், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பெரு, ரஷ்யா, ஸ்லோவேனியா மற்றும் பிற இடங்களிலிருந்து இன்றைய நினைவேந்தலுக்கு வருகை தந்திருந்தனர்.

கொலை செய்யப்பட்ட யூதர்களில் பெரும்பாலோர் எரிவாயு அறைகளில் கொல்லப்பட்டு பின்னர் தகனம் செய்வதற்காக பரந்த வளாகமான பிர்கெனோவுக்கு தொடரூந்தில் மக்களை கொண்டு சென்ற அந்த கூடாரத்தின் கீழ் அவர்கள் ஒன்று கூடினர்.

ஆஷ்விட்ஸ் மரண முகாம் ஜனவரி 27, 1945 இல் சோவியத் இராணுவத்தால் விடுவிக்கப்பட்டது

உயிர்தப்பியவர்கள் தங்களுக்கு நடந்த சோகம் நிறைந்த அந்த வரலாற்றை மீண்டு நினைவு கூர்ந்தனர்.

ஹிட்லர் தலமையிலான நாசிப்படைகளால் 6 மில்லயன் (60 இலட்சம்) யூதர்கள் படுகொலை செய்யப்பட்னர். இந்த மனிதப் படுகொலையை கொலோகோஸ்ட் என்று அழைப்பார்கள்.

No comments