எண்ணை வயலுக்குள் நுழைய முயன்றதால், அமெரிக்க, ரஷ்ய படைகளிடையே முறுகல்!


சிரியாவின் ஹசாகா பகுதியில் உள்ள எண்ணெய் வயல்களை ரஷ்ய படைகள்  அடைவதற்கு அமெரிக்க படைகள்தடைவிதித்திருப்பதால் அப்பகுதியில் பதற்றம் நிலவுவதாக சர்வதேச ஊடகங்கங்கள் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு ஹசாகாவில் உள்ள ருமேலான் எண்ணெய் வயல் குறித்து அமெரிக்க  மற்றும் ரஷ்யா இடையே தொடர்ந்து பிரச்சனை நடந்துவருகின்ற நிலையில் . உள்ளூர் செய்தி முகவர்களின் தகவல்களின்படி, அமெரிக்க வீரர்கள் எண்ணெய் வயலுக்கு செல்லும் வழியில் ஒரு ரஷ்ய இராணுவ ரோந்துப் பணியைத் தடுத்தனர் என்றும் ஹசகாவின் வடமேற்கில் உள்ள அமுடா மாவட்டத்திற்கு திரும்புமாறு அமெரிக்க வீரர்கள் ரஷ்ய வீரர்களைக் கேட்டபோது இரு குழுக்களிடையே பதற்றம் ஏற்பட்டது என்று பன்னாட்டு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

No comments