யேமனில் ஏவுகணைத் தாக்குதல்! 70 அரச படையினர் பலி!

யேமனில் ஒரு இராணுவ பயிற்சி முகாம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியதில் குறைந்தது 70 அரச படையினர் கொல்லப்பட்டதோடு மேலும்
டசின் கணக்கிலானவர்கள் காயமடைந்துள்ளனர்.

தலைநகர் சனாவிற்கு கிழக்கே சுமார் 170 கி.மீ (105 மைல்) தொலைவில் உள்ள இந்த முகாமில் தொழுகைக்காக ஒன்று கூடிய படையினரை இலக்கு வைத்தே ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலுக்கு ஹவுதி கிளர்ச்சியாளர்களே பொறுப்பு என யேமன் அரசாங்கம் குற்றம் சாட்டியுள்ளது, ஆனால் இத்தாக்குதக்கு ஹவுதி போராளிகள் இதுவரை பொறுப்பு ஏற்க வில்லை.

உயிரிழந்த படையினரின் எண்ணிக்கை உயரும் என்று எதிர்பார்ப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

யேமனின் ஜனாதிபதி அப்த்ரபு மன்சூர் ஹாடி இது ஒரு கோழைத்தனமான தாக்குதல் எனக் கண்டித்துள்ளார்.

அத்துடன் இந்த தாக்குதல் மூலம் ஹவுத்திகளுக்கு சமாதானத்திற்கான விருப்பம் இல்லை என்பதில் சந்தேகமில்லை நிரூபிக்கப்பட்டுள்ளது என்று மேற்கோள் காட்டியுள்ளார்.

சியா மற்றும் சனி முஸ்லிம் பிரிவுகளிடையே நடைபெற்றுவரும் இப்போரின் இலட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர்.

சியா பிரிவான ஹவுதி போராளிகளுக்கு ஈரான் திரைமறைவில் தலைமை தாங்குகிறது. சனி பிரிவை பிரதிநிதிப்படுத்தும் அரசாங்கத்திற்கு சவுதி அரேபியா தலைமையிலான மத்திய கிழக்கைச் சேர்ந்த  8 நாடுகள் உதவிகளை வழங்கி வருகின்றன.

குறித்த தாக்குதல்கள்கள் ஆளில்ல விமானம் மற்றும் ஏவுகணைகள் மூலம் நடத்தப்பட்டதாகவும் இதுவரை 80 படையினர் கொல்லப்பட்டதாக ஏ.எவ்.பி செய்திச் சேவை செய்தி வெளியிட்டுள்ளது.

No comments