காட்டிக் கொடுத்த செயற்கைக்கோள், விமானத்தை வீழ்த்தியது ஈரான்தான்! அமெரிக்க உறுதி

செயற்கைக்கோள் தரவுகளை மேற்கோள் காட்டி ஈரான்தான்  உக்ரைன் விமானத்தை வீழ்த்தியது என தாங்கள் "மிகவும் நம்பிக்கையுடன்" இருப்பதாக அமெரிக்க அதிகாரிகள் கூறியுள்ளனர் என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம்  தெரிவித்துள்ளது.

 176 பேர் கொல்லப்பட்ட விமான விபத்து ஈரானிய வான் தற்காப்பால் தற்செயலாக வீழ்த்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதேவேளை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பும் அதே நாளில் உக்ரேனிய விமானத்தின் பயங்கர விபத்து ஒரு பிழையாக இருந்திருக்கலாம் என்றும், கீழே விழுந்த விமானத்தைப் பற்றி தனக்கு ஒரு பயங்கரமான சந்தேகம் இருப்பதாகவும் ஆனால் எந்த ஆதாரமும் இல்லாமல் தன்னால் இப்போது கூறமுடியவில்லை என்று கூறிஇருந்த நிலையில் தற்போது இந்த செய்தி வெளியாகியுள்ளது.


பாக்தாத்தில் அமெரிக்க ட்ரோன் தாக்குதலில் ஈரானிய உயர்மட்ட ஜெனரல் ஒருவர் கொல்லப்பட்டதற்கு பதிலளிக்கும் விதமாக ஈராக்கில் அமெரிக்க  படைகளில் தெஹ்ரான் ஏவுகணைகளை ஏவிய சிறிது நேரத்திலேயே உக்ரைன் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் (யுஐஏ) போயிங் 737 என்ஜி கீழே வீழ்ந்து 176 பேர் இறந்த நிலையில் இரு நாடுகளுக்கும் இடையேபோர் பதற்றநிலை ஏற்பட்டுள்ள நிலையில் அமெரிக்க அதிகாரிகள் இந்த கருத்தை தெரிவித்துள்ளனர்.

அதேவேளை சேதமடைந்த விமானங்களுக்கு நடுவே உடைந்தநிலையில் ஏவுகணை பாகமும் கண்டுபிடித்துள்ளமை அதிர்ச்சியை ஏற்ப்படுத்திய்ய்ள்ளது.

No comments