இயல்பிற்கு திரும்பினார் ராஜித?


ஒருவாறாக பிணை அனுமதி வழங்கப்பட்டுவிட்ட நிலையில் நாரஹேன்பிட்டியில் உள்ள தனியார் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, சாதாரண அறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
அவர், தங்கியிருந்து சிகிச்சை பெறுவதற்கான அறைக்கு இன்று (01) காலை மாற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி தேர்தல் காலத்தில் வெள்ளை வேன் ஊடக சந்திப்பு தொடர்பில் கடந்த 27 ஆம் திகதி ராஜித சேனாரத்ன கைதுசெய்யப்பட்டார்.
எனினும், கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் நேற்று முன்தினம்  அவருக்கு பிணை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

No comments