யாழ்.பல்கலைகழக புவியியற்துறையின் திறந்த அழைப்பு;


யாழ்.பல்கலைகழக கலைப்பீட புவியியல்துறை திட்டமிடல் பிாிவினால் நடாத்தப்படும் “மக்களுடைய வெளி மக்களுடன் இணைந்து அபிவிருத்தி செய்வதற்கான முன்னிலைப்படுத்தல்” என்ற தலைப்பிலான அதிதி உரை நிகழ்வு யாழ்.பல்கலை கழக கைலாசபதி கலையரங்கில் நாளை வியாழக்கிழமை பிற்பகல் 1 மணி தொடக்கம் 4 மணிவரை நடைபெறவுள்ளது. 

புவியியற்துறை திட்டமிடல் பிாிவின் மக்கள் மயப்படுத்தப்பட்ட அறிவு மற்றும் திறன் பரப்புகை செயற்றிட்டத்தின் ஒரு அங்கமாகவே இந்த அதிதி உரை நிகழ்வு இடம்பெறவுள்ளது. இந்நிகழ்வில் அதிதி உரையினை ஐக்கிய அமொிக்க குடியரசின் பால்ஸ்ரேற் பல்கலைகழக பேராசிாியா் நிகால் பெரேரா நிகழ்த்தவிருக்கின்றாா். 

மேலும் இந்த நிகழ்வு அரச ஊழியா்கள், மக்கள் பிரதிநிதிகள், தனியாா் முதலீட்டாளா்கள், சிவில் சமூக அமைப்புக்கள், கல் வியலாளா்கள், அபிவிருத்திதுறைசாா் மாணவா்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரதும் கலந்து கொள்ளுதலுடன் இடம்பெறவுள்ளது. நிகழ்வில் சமூகம் மற்றும் இடம்சாா் அபிவிருத்திக்கான தீா்மானங்கள் 

எடுக்கப்படும்போது மக்கள் குழுக்களின் பண்பாடு, கலாச்சாரம் மற்றும் வாழ்வாதார கோலங்களால் உருவாக்கப்படும் மக்களின் வெளிகளை எவ்வாறு கையாளவேண்டும் என்பது தொடா்பில் கொள்கை மற்றும் பிரயோகம்சாா் விழிப்பபூட்டலினை வழங்குவதாக அமையும். இந்நிகழ்வில் அனைவரும் கலந்து கொண்டு பேசவேண்டும். 

என யாழ்.பல்கலைகழக புவியியற்துறை திட்டமிடல் பிாிவு திறந்த அழைப்பினை விடுத்திருக்கின்றது. 

No comments