தமிழ் மாணவர்களை வரவேற்கும் இந்தியா!


இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் உறவுப்பாலத்தை ஏற்படுத்தும் முகமாக இந்தியாவில் இலங்கை மாணவர்களுக்கான கல்வித் திட்டத்தை நடைமுறைப்படுத்த உள்ளதாக Sape media and events அமைப்பின் ஸ்தாபகரும் நிறைவேற்றுப் பணிப்பாளருமான சன்ஜய் தப்பா தெரிவித்துள்ளார்.

இந்திய தூதுவராலயத்தின் ஏற்பாட்டில் இலங்கை மாணவர்களுக்கான விசேட புலமைப்பரிசில் திட்டம் தொடர்பில்  யாழ்.ஊடக அமையத்தில் இன்று மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலே சன்ஜய் தப்பா இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது.

இது தொடர்பான இந்திய கல்வி கண்காட்சி நாளை 29 ஆம் திகதியும் நாளை மறுதினம் 30 ஆம் திகதியும் யாழ். வலம்புரி கோட்டலில் முற்பகல் 10 மணியில் இருந்து மாலை 6 மணிவரை நடைபெறவுள்ளது.

இந்தக் கண்காட்சியில் இந்தியாவில் இடம்பெறவுள்ள கல்வி தொடர்பாக விரிவாக காட்சிப்படுத்தப்படவுள்ளது.

இந்திய அரசு வெளிநாட்டு மாணவர்களுக்கு என்னென்ன புலமைப் பரிசில்களை வழங்குகிறது என்பதை இந்தக் கண்காட்சி ஊடாக பார்க்க முடியும் என்பதால் அனைத்து மாணவர்களும் கண்காட்சிக்கு வருமாறு அழைப்பு விடுக்கிறேன் என்றார்.

No comments