கூட்டமைப்பு பற்றி பேச தேவையில்லை?

'
தமிழ்க் கட்சிகளின் ஒற்றுமையை ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் சீர்குலைத்தவர்களே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தான் எனத் தெரிவித்துள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர்  கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஓற்றுமைக்காக வருமாறு தமிழ்க் கட்சிகளுக்கு கூட்டமைப்பு அழைப்பு விடுப்பது வேடிக்கையானது என்றும் சாடியுள்ளார்.

ஒற்றுமைக்காக தமிழ்க் கட்சிகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுத்த அழைப்பு தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்வியடம் குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது..

கூட்டமைப்பின் அந்த அழைப்பு என்பது வேடிக்கைக்குரிய ஒரு கோரிக்கை. இன்றைக்கு அந்தத் தரப்பிற்குள் இருக்கக் கூடிய பங்காளிகளே மிக வெளிப்படையாக தங்களுக்கு இந்த தேர்தலில் மிகப் பின்னடைவு வருவதற்கன வாய்ப்புக்கள் இருப்பதாக சொல்லியுள்ளனர். இதைத் தாண்டியும் அது சம்மந்தமாக நான் சொல்ல விருமப்பவில்லை.

ஆனால் அவர்கள் திரும்பவும் தேர்தலுக்குப் போறதுக்கு ஏதோ பலம் இருக்கிறதாகச் சொல்லிக் கொண்டு தான் போக வேண்டும். அதைவிடுத்து பலம் இல்லை தோல்வியடையப் போகிறோம் என்று சொல்லிக் கொண்டு போகேலாது. அந்தக் கோணத்தில் கடைசிக் கட்டத்தில் ஏதோவொரு உபாயத்தைக் கடைப்பிடிக்கப் பார்க்கின்றனர். அந்த வகையில் தான் கடைசிக் கட்டத்தில் இப்படி ஒற்றுமை என்று சொல்கின்றனர்.

ஆனால் அவர்கள் இன்றைக்கு முழுமையாக கழிக்கப்பட்ட தரப்பாகத் தான் நாங்கள் பார்க்கிறோம். அவர்களுடைய அந்த அழைப்புக் கருத்தை நாங்கள் கவனத்திலெடுக்கத் தேவையில்லை. ஒற்றுமையை ஒவ்வொரு கட்டத்திலும் குலைத்தவர்கள அவர்கள் தான்;. என்னென்ன செய்யலாமோ அந்தளவிற்குச் செய்து அவர்களோட இருந்த அத்தனை தரப்புக்களும் வெளியே போகிற நிலைமையை அவர்கள் தான் உருவாக்குகிறார்கள். அவர்கள் அப்படியொன்றை உருவாக்கிப் போட்டு இப்ப இப்படி சொல்கின்றார்கள். இது வேடிக்கையானது.

அனால் உண்மையில் நாங்கள் கொள்கை ரீதியாக வெளியில் வந்தனாங்கள். மற்றத் தரப்புக்கள் கொள்கை ரீதியாக முரண்படவில்லை. அவர்கள் முழுப் பேரும் பதவியும் செல்வாக்கும். தனிப்பட்ட கட்சி நலன்கள் என்ற கோணத்தில் தான் வெளியேறி வந்திருக்கின்றனர். ஆக ஏதோவொரு காரணத்திற்காக அந்த ஒற்றுமையை முற்று முழுதாக நாசமாக்கிய தரப்பு திரும்பவும் ஒற்றுமையை பற்றி கதைப்பது ஒரு வேடிக்கiகான விடயம். அப்படிப்பட்ட ஒரு விடயத்தை கருத்தலெடுக்கவும் தேவையில்லை. பதில் கூறவும் தேவையிலலை.

No comments