இலங்கையுடனான முரண்பாடுகளை தவிர்த்து புரிந்துணர்வொன்றை ஏற்படுத்த சுவிஸ் அரசு முற்பட்டுள்ளது.

இலங்கையை களங்கப்படுத்தும் எவ்வித நோக்கமும் தமக்கு இல்லை எனவும் அண்மைக்கால விடயங்கள் தொடர்பாக வருத்தம் தெரிவிப்பதாகவும் சுவிட்சர்லாந்து அரசு நேற்று முன்தினம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “இலங்கை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட சுவிஸ் தூதரக உள்ளூர் பணியாளர் ஒருவர் தொடர்பான தவறான புரிதல்களால் இருநாட்டு உறவுகளில் கடந்த சில வாரங்களாக விரிசல் காணப்பட்டது.

குறித்த விவகாரம் தொடர்பாக பொது மேடைகளில் வெளியிடப்பட்டு வந்த உறுதிப்படுத்தப்படாத தகவல்களால் இரு நாடுகளுக்கும் இடையில் பேணப்பட்டு வந்த நல்லுறவில் தேவையற்ற அழுத்தத்தை ஏற்படுத்தியிருந்தது. 

இந்த நிலையில், இலங்கை அரசினை களங்கப்படுத்தும் எவ்வித தேவைப்பாடுகள் சுவிட்சர்லாந்து அரசுக்கு கிடையாது” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments