மதுபோதையில் கடற்படை முகாமை தாக்க முயற்சியாம்?


நேற்றையதினம் முல்லைதீவிலுள்ள நயாருவில் உள்ள கடற்படைத் தளத்திற்குள் நுழைய முயன்ற இரு பொதுமக்களை கடற்படையினர் கைது செய்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்

குடிபோதையில் இருந்த இரண்டு நபர்கள் கையில் கத்தியுடன் கடற்படை தளத்திற்கு அருகே ஆக்ரோஷமாக நடந்துகொண்டதுடன் பின்னர் கத்தியுடன் கடற்படை தளத்துக்குள் நுழைய முயன்றதால் கைதுசெய்யப்பட்டார்கள்.

கைதுசெய்யப்பட்ட நபர்கள் அதே பிரதேசத்தில் வசிப்பவர்கள் என்றும் , 23 வயது உடையவர்கள் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சொந்தமான ஒரு மோட்டார் சைக்கிளும் கடற்படையால் கைப்பற்றப்பட்டு பின்னர் முல்லைதீவு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.


No comments