மாட்டுவண்டிச் சவாரியை தடுக்க முயன்ற பொலிஸ்

2020 ஆண்டின் முதலாவது மாண்டுவண்டி சவாரி கிளிநொச்சி, கந்தபுரம் பகுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றது.
இந்நிலையில், குறித்த போட்டிக்கு அனுமதி பெறப்படவில்லையெனவும் அனுமதியற்ற போட்டியெனவும் தெரிவித்து பொலிஸாரால் மாட்டுவண்டிச் சாவாரி போட்டி இடையில் தடுத்து நிறுத்தப்பட்டது.
இதனையடுத்து, குறித்த பிரதேச மக்களும் மாட்டுவண்டி சவாரிப் போட்டி ஏற்பாட்டுக் குழுவினரும் இணைந்து பொலிஸாருடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர்.
கடும் பிரயத்தனத்துக்கு மத்தியில் 45 நிமிடங்களாக இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து மாட்டுவண்டி சவாரி நடத்த அனுமதிக்கப்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

No comments