நான் மட்டுமா செய்தேன்? மஹிந்தவும் செய்தார்- தெறிக்கவிட்ட ரஞ்சன்

தேரர்கள் சிலர் போதைப் பொருள் வியாபாரிகளுக்காக குரல் கொடுக்கிறார்கள். அவர்களிடம் பணம் பெற்ற தேரர்கள் உள்ளனர். ஹிருவுக்கு பயந்த அரசியல்வாதிகள் இருக்கிறார்கள். அவர்கள் பேச மாட்டார்கள். நான் ஹிருவின் பக்கம் இருந்தால் கொஸ்சிப்பில் இருப்பேன்.
இவ்வாறு ரஞ்சன் ராமநாயக்க எம்பி இன்று (21) நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார். மேலும்,
கொடுத்ததை எடுத்துக் கொண்டு சொகுசாக வாழ எனக்கு தெரியும், கையசைத்து ஐஸ்கிரீம் விற்பவன் போல் இருக்கலாம். ஹலோ மச்சான் என்று அத்தனை பேரோடும் நட்பாக இருக்க முடியும். அப்படி செய்யவா? எங்களை மக்கள் அனுப்பினார்கள். எனது குரல் பதிவுகள் அனைத்தும் என்னிடம் இருக்கிறது. நான் கொல்லப்பட்டாலும் பிரச்சினை இல்லை. அவசியமான இடங்களில் லொக்கர்களிலும், நாட்டுக்கு வெளியிலும் காட்டிஸ்க் போட்டு வைத்துள்ளேன்.
நான் ஷானியிடம் சான்றுகளை பெற்றது உண்மை. நான் விவாதிக்க செல்லும் போது ஷானியிடம் எந்தனை பேர் காணாமல் ஆக்கப்பட்டார்கள், நேவி சம்பத் எங்கே என்று கேட்பேன். எழுதிக் கொள்வேன். எனது மாமா காலோ பொன்சேகா கூறுவார் மகனே நான் பேசுவதை ரெக்கோர்ட் செய்துகொள். நாங்கள் அப்படிப்பட்ட மரபணுவை கொண்டவர்கள்.
கோத்தாவின் குரல் பதிவு இல்லை. அவர் பேசியதில்லை. மஹிந்த பேசியது உள்ளது. நீதிமன்றத்துக்கு அழுத்தம் கொடுத்தவர். இப்போது நான் அதே அழுத்தம் கொடுத்ததாக கூறுகிறார். அவர் நீதிபதி பத்மினி ரணவக்கவிடம் கூறி வாசுவை அனுப்பி, இறந்த புத்திகவின் மைத்துனர் வர்ணகுலசூரிய மூலம் என்னை காப்பாற்றியதை கூறி “ரஞ்சா நீ நன்றி மறந்தவன். நீ இன்று வெளியே இருப்பது என்னால் தான்” என்றார்.
அமைச்சர்களின் மனைவிகள் என்னுடன் பேசியதை வெளியிடுங்களேன்? “அண்ணா வீட்டுக்கு வாருங்கள் வந்து..” இவற்றை நாட்டுக்கு கூறுங்கள். என்னிடம் வந்து தனது கணவனுக்கு பிரதமராகும் கனவு இருக்கிறது என்றார். அவர் மீண்டும் அமைச்சர் ஒருவரின் மனைவிக்கு கூறினார் அவரை திருமணம் செய்தவர்கள் பிரதமராவார் என யாதகத்தில் இருக்கிறதாம். யாரென்று தெரியுமா? “அண்ணா..” இவர் அமைச்சரின் மனைவியே.
இவையெல்லாத்தையும் நான் செய்தது 2015ல் கள்வரை பிடிப்பதாக கூறி ஆட்சிக்கு வந்த அரசின் கடமையை எதிர்த்தே தவிர தனிப்பட்ட தேவைக்காக இல்லை. இயேசு, புத்தர் மீது சததியம். நம்பினால் நம்புங்கள். எனக்கு கள்வர்களின் நற்சான்றிதழ் தேவையில்லை. பிணை முறி மோசடியில் அர்ஜுன் அலோசியஸ் கூறிய குரல்பதிவு இருக்கிறது. அவர் எனக்கு பணம் கொடுக்க முயன்றார். கிரிக்கெட்டில் மோசடி இருக்கிறது. திலங்கவின் மச் பிங்சிங், கிறிக்கெட் சபையில் இருந்து பணம் எடுத்த ஆதாரங்கள் இருக்கிறது.
மஹிந்த ஐயா, கோத்தா ஐயா, இயலுமானால் நியுயோர்க் டைம்ஸ் மீது வழக்கு தாக்கல் செய்யுங்கள். அதற்காக ஆசிரியர் மைக்கல் இன்னும் பார்த்து கொண்டு இருக்கிறார். அவர் தான் கூறினார் நியுயோர்க் டைம்ஸ்சில் “புஸ்பராஜா பக்சவின் கணக்கில் இவ்வளவு இருந்தது, எல்லி குணவங்ச 38 ஆயிரம் டொலர்கள் எடுத்தார்” என்று. போடுங்களேன் வழக்கு. போட்டீர்களா? வழக்கு போட மாட்டார்கள் போட்டால் அவர்களே நாசமாவிடுவார்கள்.
கடந்த காலத்தில் எனது வீட்டுக்கு சிறுவர்களான அப்பாவி பிக்குகள் இருவர் வந்தனர். அவர்களது தந்தை என்னிடம் ரஞ்சன், “இந்த பிக்கு சிறுவர்களை துஷ்பிரயோகம் செய்துவிட்டார்கள்” எனக் கூறினார்.
இதன்போது “நாட்டில் 76% வீதமானவர்கள் புத்த சமயத்தை சேர்ந்தவர்கள். கருங்கல்லில் தலையை அடித்துக் கொள்ள வேண்டாம்” என்று எனது ஊழியர் கூறினார். ஆனால் பாவமே இந்த பிக்குகள் அழுகிறார்களே. துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார்களே என்று சொன்னேன். அதற்கு “இதில் தோன்ற வேண்டாம் சுற்றிவளைத்து தாக்குதவார்கள்” என்றார்.
நான் தந்தையிடம் கேட்டேன் ஏன் என்னிடம் வந்தீர்கள் என்று. அவர் சொன்னார் “நீங்கள் தான் இதனை பேசுபவர், போக வேறு இடமில்லை” என்று. ஏன்? நாயக்க தேரர்களிடம் போங்களேன் என சொன்னேன். அதற்கு அந்த தந்தை கூறினார் “அவர்களும் இதே தவறை புரிந்தவர்கள் தான்” என்று. இதனால் நான் எனக்கு கழுத்தில்லாமல் போனாலும் பரவாயில்லை இதற்காக பேசுவேன் என்றேன். – என்றார்.

No comments