காணி அபகரிப்பை எதிர்த்து போராட்டம்

வவுனியாவில் அதிகாரத்தை பயன்படுத்தி பொது மக்களின் காணிகளை அபகரித்த அதிகாரிகளைக் கண்டித்து போராட்டம் ஒன்று இன்று (29) முன்னெடுக்கப்பட்டது.

இந்த போராட்டம் வடக்கு மாகாண மக்கள் திட்ட ஒன்றியத்தின் ஏற்பாட்டில் வவுனியா மாவட்டச் செயலகத்துக்கு முன்பாக இடம்பெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்து கூறியதாவது ,வவுனியா நகர பிரதேச செயலாளராக கடமையாற்றிய உதயராசா பல காணி மோசடிகளில் ஈடுபட்டமை தொடர்பாக தகவல்களை வெளிக் கொணர்ந்ததை அடுத்து, அவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

எனினும் அவரை பணி இடைநிறுத்தம் செய்து விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும். என்றும் இது தொடர்பான ஊழல் அதிகாரிகளை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

No comments