குரல் பதிவால் பதவி இழந்தார் உக்ரைன் பிரதமர்!

ஜனாதிபதியை விமர்சித்து பேசிய குரல்பதிவு வெளியானதை அடுத்து உக்ரைன் பிரதமர் ஒலெக்சி ஹொன்ஷருக் பதவி விலகினார்.
உக்ரைன் ஜனாதிபதி வொலொடோமைர் ஜெலென்கேயின் பொருளாதாரம் தொடர்பில் பேசிய குரல் பதிவு கசிந்ததை அடுத்தே அவர் பதவி விலகியுள்ளார்.
பதவி விலகல் முடிவு குறித்து ஒலெக்சி தனது முகநூல் பக்கத்தில் இன்று (17) சற்றுமுன் தெரிவித்துள்ளார்.
அவரது இராஜினாமா கடிதம் குறித்து ஆராயப்படும் என்று ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஒக்லெக்சி உக்ரைன் நாட்டின் மிக இளம் பிரதமர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது அவருக்கு 35 வயதாகும்.

No comments