புளொட்டுடன் ஜக்கியமாகும் ஜங்கரநேசன்?


சி.வி.விக்கினேஸ்வரன் தரப்புடன் டீல் பணியாததால்  முன்னாள் விவசாய அமைச்சர் பொ.ஜங்கரநேசன் கூட்டமைப்பு பக்கம் பாய மீண்டும் மும்முரமாகியுள்ளார்.

இதற்கேதுவாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர் சித்தார்த்தனைத் தொடர்பு கொண்ட தமிழ்த் தேசியப் பசுமை இயகத்தின் தலைவரான பொ.ஐங்கரநேசன் அந்தக் கட்சிக்கு யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஒதுக்கப்பட்ட இரண்டு ஆசனங்களில் ஒன்றைத் தனக்குத் தரும்படி கோரியுள்ளார்.

ஆனால் அதற்கு உடனடியாக எந்தச் சாதகமான பதிலையும் வழங்காத சித்தார்த்தன் தான் சந்தித்துப் பேசுவோம் என்று கூறியுள்ளார்.

எனினும் இச்சந்தரப்பத்திற்கு கஜதீபன் காத்திருப்பதால் அது சாத்தியமில்லையென உட்கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக சி.வி.விக்கினேஸ்வரனின் கட்சியில் பிரதி தலைவர் பதவி கோரியபோதும் அது வழங்கப்படாமையாலேயே தனித்து கட்சியொன்றை அவர் அமைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments