ஈபிடிபி உறுப்பினர் மீது சராமரியாக வாள் வெட்டு

யாழ்ப்பாணம் - பருத்துறை பிரதேச சபை உறுப்பினர் மீது இனந்தெரியாத நபர்களினால் இன்று (26) இரவு 7 மணியளவில் கட்டைக்காடு, முள்ளியான் பகுதியில் வைத்து வாள்வெட்டு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த ஈ.பி.டி.பி கட்சி சார்ந்த பருத்துறை பிரதேச சபை உறுப்பினரான செபமாலை செபஸ்ரியன் என்பவர் கையில் பலத்த காயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இனந்தெரியாத நபர்கள் இவரை வாளால் வெட்டிக் காயப்படுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளர் எனத் தெரியவருகிறது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

No comments