அமைதிப்படைக்கு அஞ்சலி: முன்னணியும் ஆதரவு!

இந்தியாவின் குடியரசு நாளின் 70வது ஆண்டு விழாவை முன்னிட்டு வடகிழக்கில்  உயிர் நீத்த இந்திய அமைதிப்படையினருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. யாழ் இந்திய துணைத் தூதரகத்தின் குடியரசு நாள் நிகழ்வுகள் காலையில் தூதரகத்திலும் முற்பகல் நகர விடுதியொன்றிலும் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டது. முன்னதாக இந்தியத் துணைத் தூதுவர் பலாலியில் அமைந்துள்ள இந்திய அமைதிப்படையில் உயிரிழந்தவர்களின் நினைவாலயத்தில் யாழ் கட்டளைத் தளபதி ருவான் வணிக சூரியவுடன் இணைந்து மலர் அஞ்சலி செலுத்தினார். 
காலை நிகழ்வுகள் காலை 9.00 மணிக்கு யாழ் இந்தியத் துணைத் தூதுவர் சங்கர் பாலச்சந்திரன் தலைமையில் கொடியேற்றத்துடன் ஆரம்பிக்கப்பட்டது. தூதரக அலுவலர்கள் வடமாகாணத்தில் வசிக்கும் இந்திய குடிமக்கள் மற்றும் இந்திய வம்சாவழியினர், இந்திய நலன் விரும்பிகள், ஊடகவியலாளர்கள் என 100ற்கும் மேற்பட்ட பலரும் நிகழ்வில் கலந்து கொண்டனர். 

வடமாகாண ஆளுனர் திருமதி சாள்ஸ், தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா, வடமாகாண அவைத் தலைவர் சீ.வீ.கே சிவஞானம், யாழ் மாநகரசபை முதல்வர் ஆர்னோல்ட், பாராளுமன்ற உறுப்பினர்கள், தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர்கள், முன்னாள் அமைச்சர் அனந்தி உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டு ஆதரவளித்திருந்தனர்.

No comments