சிறையில் அடைக்கபட்டவருக்கு ஒரு இலட்சம் பவுண்கள் இழப்பீடு

ஸ்காட்லாந்தில் பிழையான நபரைக் கைது செய்து சிறையில் அடைத்தமைக்காக நபருக்கு 100,000 பவுண்கள் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

 2015 ஆம் ஆண்டில்  இவர் கைது செய்யப்பட்டு ஒரு இரவு காவல் நிலையத்திலும் மூன்று இரவுகள் சிறையிலும் அடைக்கப்பட்டிருந்தார்.

60 வயதான கேரி வெப் வீட்டில் மணைவியுடன் இருந்தபோது குற்றப் புலனாய்வு காவல்துறை அதிகாரிகள் வந்து கைது செய்வதற்கான பிடியாணையைக் காட்டி கைவிலங்கு போட்டு காவல்நிலையம் அழைத்துச் சென்றார்கள்.

பிழையான நபரின் பிடியாணை புகைப்படத்தை வைத்திருந்தார்கள் காவல்துறையினர்.

கேரி வெப் தன்னுடைய கடவுச்சீட்டு, வாகன ஓட்டுநர் அட்டை மற்றும் குடும்ப புகைப்படங்களைக் காட்டியும் குற்றவாளியிடமிருந்து தான் வேறுபட்டவர் என்பதை உறுதி செய்தும் அவர்கள் தன்னைக் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

காவல்துறையினர் தன்னுடைய விரல் அடையாளங்களை வைத்திருந்தும் குற்றவாளி இல்லை என அவர்களுக்குத் தெரிந்தும் என்னைக் கைது செய்துள்ளனர் என்றார் வெப்.

இவர்கள் செயற்பாட்டால் என் வாழ்க்கை சீரழிந்து மோசமாகச் சென்றுவிட்டது.

 நான் என் மனைவியுடன் வீட்டில் இருந்தேன், பின்னர் நான் யார் என்று யாரும் நம்பவில்லை, கற்பனைக்கு எட்டாத மோசமான குற்றவியல் குற்றச்சாட்டுகளை நான் எதிர்கொள்கிறேன். எனக்குப்  பைத்தியம் பிடித்துவிட்டது என்று நினைத்தேன். நான் எப்படி என்று யாரும் நம்ப முடியாது?

 அவர் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு பின்னர் சிறைச்சாலையில் ஒரு அறையில் மூன்று இரவுகள் கழித்தன. பின்னர் எந்த விளக்கமும் மன்னிப்பும் இன்றி விடுவிக்கப்பட்டார் வெப்.

No comments