அறிவுறுத்த அதிகாரமில்லை

நீதிமன்றில் விசாரணைக்கு எடுக்கப்பட்ட வழக்குகள் குறித்து சட்டமா அதிபருக்கு அறிவுறுத்த அரசியல் பழிவாங்கல் குறித்து ஆராயம் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு சட்ட அதிகாரமில்லை என்று சட்டமா அதிபரால் குறித்த ஆணைக்குழுவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆணைக்குழுவானது நேற்றைய தினம் தமிழர்கள் உள்ளிட்ட 11 இளைஞர்கள் கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட வழக்கின் முக்கிய சந்தேக நபர்களான முன்னாள் கடற்படை தளபதிகள் வசந்த கரன்னகொட (அட்மிரல் ஒப் த ப்ளீட்) மற்றும் டிகேபி.தஸாநாயக்க (ரியர் அட்மிரல்) ஆகியோருக்கு எதிரான வழக்குகளை இடைநிறுத்துமாறு சட்டமா அதிபருக்கு அறிவுறுத்தியிருந்தது.

இந்நிலையிலேயே சட்டமா அதிபரால் குறித்த ஆணைக்குழுவுக்கு அதிகாரம் இல்லை என்று அறிவித்துள்ளது.

No comments