பேருந்துகளில் கஞ்சா; மூவர் சிக்கினர்

வவுனியா – வடக்கு புதூர் பகுதியில் இராணுவ சோதனை சாவடியில் இரண்டு பேருந்துகளை சோதனையிட்ட இராணுவத்தினர் 6 கிலோ கஞ்சாவை கைப்பற்றியுள்ளனர்.

இதன்படி பருத்தித்துறையிலிருந்து நேற்று (27) இரவு 7:00 மணிக்கு மருதங்கேணி ஊடாக கொழும்பு நோக்கி புறப்பட்ட பேருந்தில் ஐந்து கிலோ கஞ்சாவும்,

யாழ்ப்பாணம் பஸ்தரிப்பு நிலையத்தில் இருந்து இரவு எட்டு மணிக்கு கொழும்பு நோக்கி புறப்பட்ட பேருந்தில் ஒரு கிலோவுமாக மொத்தம் 6 கிலோ கஞ்சா படையினரால் கைப்பற்றப்பட்டது.

இதன்போது மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை கடந்த 3 நாட்களில் மட்டும் குறித்த சோதனைச்சாவடியில் வைத்து 33 கிலோ கஞ்சாவுடன் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

No comments