வடக்கிற்கு இன்னமும் கண்டமில்லை?



இலங்கையில் கொரோனோ வைரஸ் தொற்றுக்கு இலக்கானவர்கள் என சந்தேகிக்கப்படும் நபர்கள் யாழ்.போதனா வைத்தியசாலை உள்ளிட்ட 12 வை த்தியசாலைகளில் அனுமதிக்கலாம் என அரசு அ றிவித்திருக்கின்றது.


இதன்படி ராகமை, கம்பஹா, நீர்கொழும்பு, கண்டி, கராப்பிட்டிய, அனுராதபுரம், யாழ்ப்பாணம், குருநாகல், இரத்தினபுரி, மட்டக்களப்பு, பதுளை ஆகிய வைத்தியசாலைகளில் அனுமதிக்க முடியும் எனவும் அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
இந்த நிலையில் முல்லைத்தீவில் நபரொருவருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டிருப்பதாக நேற்று இரவு சமூக வலைத்தளங்களும் சில இணைய ஊடகங்களும் செய்தி வெளியிட்டிருந்தன.

இதுதொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சுகந்தனிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது கொரோனா வைரஸ் இருப்பதாக சந்தேகிக்கப்பட்ட நபரை கொழும்புக்கு அனுப்பி பரிசோதனை செய்ததாகவும் எனினும் அவ்வாறான தொற்று அவரிடம் இல்லை என்றும்இ பரவிய செய்தியில் உண்மையில் என்றும் மறுத்துள்ளார்.

இதேவேளை முல்லைத்தீவு மருத்துவமனையில் பரிசோதனைக்குட்படுத்தும் வசதி இல்லை என்பதாலேயே அவரை கொழும்புக்கு அனுப்பி பரிசோதிக்க வேண்டி ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments