காணியை திருட முயன்ற கடற்படை; முறியடித்த மக்கள்

யாழ்ப்பாணம் – புங்குடுதீவு, மடத்துவெளி பகுதியில் தனியாரின் 10 பரப்பு காணியை அபகரிக்கும் கடற்படையினரின் முயற்சி மக்களின் எதிர்ப்பால் முறியடிக்கப்பட்டுள்ளது.

தனியாருக்கு சொந்தமான பத்து பரப்பு காணியை சுவீகரித்து தமது முகாமை பாரிய முகாமாக்கும் செயற்பாடுகளை கடற்படையினர் முன்னெடுத்திருந்தனர்.

இதற்கு எதிராக இன்று (28) காலை பிரதேச சபை உறுப்பினர் நாவலனின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இன்று நில அளவீடு செய்து காணியை அபகரிக்க முயன்ற பாேதே அப்பகுதியில் வாழ்கின்ற பொது மக்களுடன் இணைந்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மக்களின் எதிர்ப்பையடுத்து காணியை அளவீடு செய்து அபகரிக்கும் முயற்சியை கடற்படையினர் கைவிட்டு அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.

No comments